Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

தலித் பெண்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு

பதிவு செய்த நேரம்:2013-04-03 10:55:10
MORE VIDEOS

கோவை, :மகளிர் தினத்தை முன்னிட்டு துடி இயக்கம் சார்பில் தலித் பெண்கள் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று தாமஸ் கிளப்பில் நடந்தது. தேசிய இளைஞர் விருதாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். கோவை அரசு சட்டக்கல்லூரி லாவண்யா வரவேற்றார். இக்கருத்தரங்கில் கோவை துணை ஆட்சியர் (பயிற்சி) திவ்யதர்ஷினி துவக்கி வைத்து பேசுகையில், ‘‘ குடும்பத்தில் பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், பெண்கள் உயர்கல்வி பெற்றால்தான்
குடும்ப பொருளாதாரம் முன்னேறும், மாணவிகள் மேற்படிப்பு பயிலும் போது கஷ்டப்பட்டு படிக்காமல், இஷ்டப்பட்டு படிக்க வேண்டும், வெளியூர்களில் சிறப்பான வேலை கிடைத்தால் அங்கு சென்று வேலை செய்தால்தான் மனதைரியத்தை வளர்த்து கொள்ள முடியும். மத்திய, மாநில அரசு நடத்தும் அரசு தேர்வுகளில் பங்குபெற வேண்டும். அனைத்து துறைகளில் பெண்கள் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளார்கள், மாணவிகள் தன்னம்பிக்கை,  முழுமுயற்சியுடன் போ ராடினால் வாழ்கையில் வெற்றி பெற முடியும்’ என்றார்.  
மாவட்ட ஆதி திராவி டர் நலத்துறை அலுவலர் சுரேஷ், வட்டாட்சியர் (ஓய்வு) சந்திரன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி ரவிக்குமார் ஆகியோர் பேசினர். வருமான வரித்துறை துணைஆணையர் (ஓய்வு) ரெஜீனா கூத்தநாச்சியார், வழக்கறிஞர் அசோக்குமார், பேராசிரியர்கள் சுரேஷ் பாபு, கவிதா, ஆர்.ஜி.என்.ஓய்.டி பயிற்சி அலுவலர் வெரோணிகா, சமூக அலுவலர் மாதவி, வக்கீல் பஞ்சலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

மேலும்

Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

சிறப்புப் பேட்டி மியூஸிக் சீசன் தொடங்கிவிட்டது. சபாக்களில் கூட்டம் அலைமோதும். அதுவும் நித்யஸ்ரீ பாடும் அரங்கினுள் நிற்கக்கூட இடமிருக்காது. அந்தளவுக்கு  ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருக்கும் கர்நாடக ...

இனிய இல்லம்: தமிழினிதோட்டமென்பது இயற்கைத் தூரிகையால் வரையப்பட்ட லாண்ட்ஸ்கேப்பிங் ஓவியமே! - வில்லியம் கென்ட்‘‘சார்... நல்லாயிருக்குறீங்களா? நம்ம செடிகள்லாம் எப்படி இருக்குதுங்க? நல்லா கவனிச்சிக்கோங்க சார்...’’ ...

Advertisement

தேர்தல் செய்திகள்

Advertisement
Advertisement


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தெளிவு
கவலை
வெற்றி
பரிவு
நலம்
நட்பு
பாராட்டு
நற்செயல்
ஆர்வம்
ஆதரவு
சுகம்
சுபம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran